Subscribe Us

header ads

தாம் இனவாதியோ மதவாதியோ இல்லை, ஆனால் சிங்களவன், பௌத்தன் என்கிறார் மஹிந்த


தாம் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் மற்றும் ஒரு மதத்துக்கு எதிராக ஒரு மதத்தினரை கோபம்கொள்ள ஊக்கமளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் சிங்களவர்.அத்துடன் பௌத்தர் என்பதை தாம் ஒருபோதும் மறுக்க முடியாது என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.

தாம் எல்லா மதங்களையும் மதிப்பதாகவும் எல்லா சமூகங்களுக்கும் மதிப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர் பௌத்தம் அதனையே தமக்கு கற்றுத்தந்ததாக கூறியுள்ளார்.

கண்டியில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நியாயமானவர்கள் தம்முடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், கட்சிக்குள் சில உயர் உறுப்பினர்களை போன்று பிரச்சினைகளை ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments