பொத்துவில் பிரதேசத்திலுள்ள முகுது மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமான பௌத்த கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஜனாதிபதியின் புதல்வர் தகம் சிறிசேன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பௌத்த கோபுரத்தின் திறப்பு விழாவின் பின்னர் ஜனாதிபதியால் மரக்கன்றும் நடப்பட்டது.
ஜனாபதியின் வருகையையும் திறப்பு விழாவினையும் முன்னிட்டு பொத்துவில் நகரம் பௌத்த கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
0 Comments