Subscribe Us

header ads

ஸ்மார்ட்போனில் அழகிய புகைப்படம் எடுப்பது எப்படி..?


ஸ்மார்ட்போன் வரவு புகைப்படம் எடுப்பவர்களுக்கான மவுசை குறைத்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்க காரணமே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரும் புகைப்படம் எடுக்க துவங்கி விட்டதே ஆகும். எனினும் அனைவரும் சிறப்பான புகைப்படத்தினை எடுப்பதில்லை என்றே கூற வேண்டும். 

அந்த வகையில் ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படங்களை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள். ஸ்மார்ட்போன் கேமராவை கொண்டு அழகான புகைப்படங்களை எடுக்க பயன்படுத்த வேண்டிய சில அம்சங்களை தொடர்ந்து பாருங்கள்....... 

ஹெச்டிஆர் மோடு;அதிகளவு வெளிச்சமும், வெளிச்சம் குறைவாக இருக்கும் இடங்களையும் ஒரே ஃப்ரேமில் எடுக்க வேண்டுமானால் ஹெச்டிஆர் மோடு பயன்படுத்தலாம். இந்த மோடு வெளிச்சத்தை சரியான விகிதத்தில் எடுத்து கொண்டு புகைப்படங்களை சிறப்பாக காட்டும். 

ஃபோகஸ்;புகைப்படங்களில் ஃபோகசிங் சரியாக அமைந்துவிட்டால் அதன் அழகே தனி தான், சில ஸ்மார்ட்போன்களில் ரீபோகசிங் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஷன் புகைப்படம் எடுத்த பின்பும் போக்ஸ் செய்ய வழி செய்கின்றது. 

க்விக் லான்ச்;புகைப்படங்களை சரியான நேரத்தில் எடுக்க கேமரா செயலி எந்நேரத்திலும் எளிதாக ஓபன் செய்ய கூடியதாக இருக்க வேண்டும், சில ஸ்மார்ட்போன்களில் க்விக் லான்ச் ஆப்ஷன் வழங்கப்பட்டிருந்தால் கேமராவை எளிதாக ஓபன் செய்வதோடு நொடிகளில் புகைப்படத்தினை எடுத்து விட முடியும். 

கேமரா பட்டன்;ஸ்மார்ட்போன் கேமராகளில் மற்றொரு உபயோகயமான விஷயம் கேமரா பட்டன்களை செட் செய்து வைப்பது, சில சமயங்களில் புகைாப்படங்களை லேன்ட்ஸ்கேப் மோடில் எடுக்கும் போது வசதியாக இருக்க வால்யூம் பட்டன்களை கேமரா பட்டனாக செட் செய்து கொள்ளலாம். 

விளக்கு;வெளிச்சம் இல்லாமல் புகைப்படம் முழுமையாகவே முடியாது. புகைப்படங்களை எடுக்க சரியான நேரம் அதிகாலையில் சூரியன் உதிக்கும் போதும், மாலையில் சூரியன் மறையும் நேரம் தான். பெரும்பாலும் இந்நேரங்களில் புகைப்படம் எடுத்தால் வெளிச்சம் சரியாக இருப்பதோடு துள்ளியமான புகைப்படங்களையும் எடுக்க முடியும். 

தொகுப்பு;புகைப்படம் எடுக்கும் போது அவசியம் கவனிக்க வேண்டியது அதன் ஃப்ரேம்களை தான், அதாவது நீங்கள் படமாக்கும் இடம் சரியாக தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். பார்க்க முழுமையாக இருக்க வேண்டும். 

பொறுமை;புகைப்படம் எடுக்கும் போது அவசியம் பொறுமையோடு இருக்க வேண்டும். பொறுமையில்லாதவர்கள் என்றும் அழகான புகைப்படங்களை எடுக்கவே முடியாது.......!

Post a Comment

0 Comments