இதோ இன்னும் வாட்ஸ் ஆப் கலாட்டா. ஒரு கல்யாணம். அதற்கு வைத்த பேனரில் எப்படியெல்லாம் பீதியைக் கிளப்பியுள்ளார்கள் பாருங்கள் இவர்கள். கல்யாணம், காதுகுத்து, மொட்டை போடுதல், அமெரி்க்கா, ஆப்பிரிக்கா போய் விட்டு நாடு திரும்புதல், வெளிநாடு செல்ல விசா கிடைத்தது, பத்தாவது வகுப்பில் முதல் அட்டம்ப்ட்டிலேயே பாஸ் செய்வது,
விரும்பிய என்ஜீனியரிங் கல்லூரியில் இடம் கிடைப்பது என காரணமே இல்லை..நம்மவர்கள் போஸ்டர் அடித்து, டிஜிட்டல் பேனர் வைத்துக் கொண்டாடுவதற்கு. அந்த வகையில் ஒரு கல்யாணத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் இது.......
ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு
- மாணவர் கைது
கைது செய்பவர்
-லலிதாம்பிகை
கைது ஆனவர்
- சோமசுந்தரம்
குற்றம்
- பெண்ணின் மனதை திருடியது
தண்டனை
- மூன்று முடிச்சி
சாட்சி
- அப்பா, அம்மா, மாணவர்கள்
இங்ஙனம்
- ஆட்டையாம்பட்டி ஊர் பொதுமக்கள்.
நல்லா கிளப்புறீங்கப்பா பீதியை.......!



0 Comments