Subscribe Us

header ads

பசில்- ராஜித சந்திப்பின் நோக்கம் என்ன?


கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிணையில் விடுதலையாகிய பசில் ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கம் என தகவல் வெளியாதகியுள்ளது.

சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினருக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கத்தில் பசில் ராஜபக்சவை இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின் போது இரண்டு மணித்தியாளங்கள் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்திப்பிற்கு லசந்த அலிகியவன்னவும் இணைந்துகொண்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இச்சந்திப்பின் முடிவுக்கமைய பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும நாட்களில் விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் மைத்திரி தரப்பினரின் யோசனைக்கு முன்னாள் அமைச்சர் இதுவரையில் எவ்வித பதிலும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments