ஷபீக் ஹுஸைன்
நேற்று அதாவது 21.06.2015 மாலை 04.45 க்கு ஆரம்பமாகிய 'ஹகீமுடன் ஒரு சில மணித்தியாலங்கள்' எனும் நிகழ்வு முகநூல் செயல்பாட்டாளரும் கவிஞ்ஞருமான ரவூப் ஹசீரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
முக நூல் தளத்தில் உணர்வு பூர்வமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் இருந்து தெரிவு செய்யப்பட்ட இருபது பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வாக இருந்ததால் மற்றவர்களுக்கு வேறு ஒரு தினத்தை ஒதுக்குவது என்;ற அடிப்படையில் இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலந்து கொள்பவர்களுடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துப் பறிமாற்றத்தை முறையாக செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வு 20 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டது என நிகழ்வின் ஆரம்பத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அமைச்சர் இந்நிகழ்விற்கு சற்று தாமதாக வந்திருந்த போதும் அனைரையும் அறிமுகம் செய்யும் படி கேட்டுக்கொண்டார். அதன் பிற்பாடு பதிவர்கள் கருத்துக்களை கட்சி சார்பாகவும், சமூகம் சார்பாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தெடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், நமது சமூகம் ஊடகத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதனாலும் இன்று சமூக வலைத்தளங்கள் ஊடக வலையமைப்பில் பாரிய தாக்கத்தை உருவாக்குவையாக இருப்பதாலும், அத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பலருள் உங்களை மாத்திரம் அழைத்து இந்நிகழ்வை செய்ததாலும் கூடிய விரைவில் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் இதுபோல கலந்துறையாடல்களை ஒழுங்குபடுத்தி எமது சமூகத்திற்கான பணியை விரிவுபடுத்த எண்ணியுள்ளோம். அதற்காக ஒரு முறையாக கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் நீங்கள் செயற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொன்னார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இன்று பாராளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிற 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமாக நாடலாவிய ரீதியில் நாம் செயற்பட வேண்டிய அவசியம் உணரப்பட கால கட்டத்தில் உங்களை சந்திக்க கிடைத்தது மகிழ்சியை தருகிறது என்றும் சொன்னார்.
நோன்பு திறக்க முன்னரும், நோன்பு திறந்த பின்னரும் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்தவர்கள் 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமான கலந்துறையாடல்கள், மக்களுக்கு தெளிவுருத்தும் நிகழ்வுகள் என்பன மிக விரைவில் ஒழுங்கு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வழியுறுத்தியே தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
கடந்த காலங்களைப்போலல்லாது இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாய் உள்ளது, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயற்படுவதற்கு ஒவ்வொரு அமைப்பாளர்களும் தங்கள் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான வளவாளர்களை அதிகரித்து சிறப்பாக செயற்படுத்துவதற்கு தயாராக வேண்டும். அது மாத்திரமின்றி எதிரியினைப்போல் செயற்படாமல் சற்று மாற்றமாக செயற்படவேண்டும் என்றும் பலரும் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களை விளித்துப் பேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முகநூலில் கருத்துப் பதிவிடுபவர்கள் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ந்து கொள்வதுடன் மாற்றுக் கட்சியினரை விமர்சிக்கும் போது ஊடக தர்ம நியாயங்களை மீறாத முறையில் நியாயமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு நிகழ்வு நடைபெற்றதே தவிர அமைச்சர் ஹக்கீம் யாரிடமும் மண்டியிட்டு தன்னையும் கட்சியையும் காப்பாற்றம் படி சொல்லவுமில்லை, அப்படியான ஒரு விடயம் நடைபெறவுமில்லை. கலந்து கொண்டவர்கள் நாட்டின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்தவர்கள் என்ற காரணத்தினால் போக்குவரத்து செலவிற்காக 2000 ரூபா வழங்கப்பட்டதே தவிர வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்டதாக தெரிய வில்லை.
இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வோருக்கு போக்குவரத்துச் செலவு வழங்குவது நடைமுறையில் உள்ள வழக்கமாகும். சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாதின் பங்களிப்புடன் முஸ்லிம் மீடியா போரம் ஒழுங்கு செய்திருந்த கலந்துறையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு 2500ரூபா கொடுப்பணவு வழங்கப்பட்டது என்பதை இதனை பூதகரமாக்கி செய்தியாக வெளியிட்டிருக்கும் முகம் பெயர் அற்ற விஷமிகள் மறைத்ததன் இரகசியம் என்ன?


0 Comments