Subscribe Us

header ads

என்னிடம் கட்சி, நிற பேதங்கள் இல்லை: ஜனாதிபதி


நாட்டின் ஜனாதிபதியாக செயற்படும்போது ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்பதை மாத்திரமல்லாது அரசியல் கட்சி பேதங்களை தான் கவனத்தில் கொள்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்யும் போது நீலம், பச்சை என எண்ணி பணியாற்றுவதில்லை எனவும் ஜனாதிபதி என்ற வகையில் நடு நிலையாகவும் பக்க சார்பின்றியும் தனது சேவையை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கிராமம் ஒன்றில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் வறுமை, குறைப்பாடுகள், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய நடவடிக்கைகளிலும் அரசியல் பேதங்கள் இன்றி செயற்படுவதே தனது கொள்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments