எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் நடத்தப்படுவது குறித்து நாளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தேர்தல் செயலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார்.
வேட்பு மனுக் கோரல் மற்றும் தேர்தல் தினம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலும் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை அறிவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான பின்னணி:-
ஐக்கிய தேசியக் கட்சியின் கடுமையான அழுத்தம் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என நேற்றைய தினம் வரையில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன ஊடகவியலாளர் சந்திப்புக்களில் திட்டவட்டமாக அறிவித்து வந்தார்.
எனினும், இன்றைய தினம் திடீரென பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையிலான கடுமையான கருத்து மோதல்கள் பாராளுமன்றம் கலைக்கப்படுவதனை துரிதப்படுத்தியது.

குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான சர்ச்சைகளே பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான உடனடிக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிர்வரும் 7ம் திகதி நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் பாராளுமன்றில் நடத்தப்படவிருந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானங்களை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தன.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து வரும் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கூட காலம் தாழ்த்தி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் எனினும், ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான விவாதம் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.
முதலில் 20ம் திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் இந்த முயற்சி பலனளிக்காத காரணத்தினால் மிக நெருக்கடியான நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் பின்னர் தேர்தல் நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென மேற்கொண்ட பிரயத்தனங்களுக்கு எந்தவொரு தரப்பும் பூரண ஆதரவினை வழங்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளும் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த உத்தேச யோசனைத் திட்டத்தை கடுமையான விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுத் தேர்தலில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவது இல்லை என்பது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி பூர்த்தியாகியுள்ளது.
இதுவரையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மஹிந்த ராஜபக்ஸ விண்ணப்பத்திருக்கவில்லை என கட்சி வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்ய முயற்சித்து வருவதாக குளோபல் தமிழ் செய்திகளின் பிரத்தியேக செய்தியாளர் தெரிவிக்கிறார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவினை வழங்கி வெற்றியீட்டச் செய்த பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியின் மீது பிரயோகித்த அழுத்தங்களே பாராளுமன்றம் கலைக்கப்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. குளோபல் தமிழ் செய்திகளின் பிரத்தியேக செய்தியாளர் தெரிவிக்கிறார்.-GTN-

0 Comments