Subscribe Us

header ads

றணில் சொல்வதெல்லாம் பொய் நான் சொல்வதெல்லாம் மெய் என்கிறார் மஹிந்த


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றல் வெளியிட்ட கூற்று பிழையானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து தவறானது என மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாராளுமன்றில் வெளியிட்ட கருத்து பாராளுமன்றையும், மக்களையும் பிழையாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரினால் வாசிக்;கப்பட்ட அறிக்கையை செவி மடுக்கும் எவரும் முன்னாள் ஜனாதிபதிக்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவே உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வாகனங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துமே பயன்டுத்த முடியாத பழையவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு போதியளவு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டடு இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒர் காரியாலயம் கூட வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments