Subscribe Us

header ads

இலக்கினை நோக்கி செல்லும் கூட்டுமுயற்சி

(கத்தாரிலிருந்து எம்..பீ. வசீம் அக்ரம்)


அபிவிருத்தி, சமத்துவம், சமாதானம் மற்றும் போதைஒழிப்புக்கான பெண்கள் அமைப்பு [Women Organization for Development, Equality, Peace and Temperance (WODEPT)] தனது இலக்கினை நோக்கிய பயணத்தில் விடாமுயற்சியுடன் செல்வதை அண்மைய செயற்பாடுகள் தெளிவுப்படுத்துகின்றன.

இதன் ஆரோக்கியமான பயணத்திற்கு இதன் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினரின் கூட்டு முயற்சியும், அர்ப்பணிப்பும் இன்றியமையாதது என்றால் மறுப்பதற்கு ஏதும் இல்லை.

புத்தளம் பிரதேசத்தின் தொய்வு நிலையில் இருக்கும் கிராமங்கள், சமூகங்கள் என்பவற்றை தேடி கண்டறிந்து அவர்களையும் சமூகத்தின் நடுத்தர மட்டத்திற்கு அழைத்து செல்லல், வறுமை கோட்டிற்கு கீழே வாழும் நான்கு சமுதாய அங்கத்தவர்களையும் ஒருங்கே முன்னேற்றல் என்பது இவ்வமைப்பின் செயற்பாடுகளில் வரவேற்கதக்க ஒன்றாகும்.

சமத்துவம் பேசும் இவ்வமைப்பு தனது அங்கத்தவர்களில் நான்கு சாரார்களையும் உள்ளடக்கி அவர்களுனூடாக சமூகத்திற்குள் அறிமுகமாகிறது, சமத்துவத்தை, சகவாழ்வை எடுத்துக்கூறுவது சிறப்பான வழிமுறையாகும். நத்தார் கொண்டாட்டங்களாகட்டும், வெசாக் வைபவங்களாகட்டும், தீபாவளி பண்டிகையாகட்டும், ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா என அனைத்து பாகங்களிலும் அகல விரிக்கின்றது இச்சமாதான பறவை. இவ்வெள்ளை புறாவின் செயற்பாடுகள் வெண்மையாக மின்னுகிறது.

மிகவும் வரவேற்கத்தக்கதொன்றும், பாராட்டப்பட வேண்டியதொன்ரும் தான் போதை பொருளுக்கு எதிரான இதன் வகிபாகமாகும். தொடரான இதன் எதிர்ப்பும், போதை பொருளுக்கு எதிரான இதன் நிலைப்பாடும் கூடிய சீக்கிரம் இதன் இலக்கினை புத்தளம் நகரில் அடையும், விரைவாக சிகரத்தை எட்டும் அறிகுறிகளாகும்.

சிறுவர்களிலிருந்து பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் என அனைத்து வர்க்கத்திலும் இதனது விழிப்புணர்வு சென்றடைகிறது. நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், போதையால் ஏற்படும் பாதிப்புக்கள் அடங்கிய காணொளிகளை காட்சிப்படுத்தல், போதை பொருளால் தான் மட்டுமல்ல பாதிப்படைவது மனைவி, பிள்ளைகள், சமூகம் என அனைவருமே எனும் அமைதி பேரணி நடத்துவது, துண்டுபிரசுரங்களை பகிருவது, காட்சிப்படுத்துவது என இன்னோரன்ன பணிகள் வானிலிருந்து கொட்டும் நீர்த்துளிகளாகும்.

புத்தளம் வரும் நாட்களில் போதைப்பொருள் இல்லாத தூய்மையான நகராக விரும்பும் அனைவரும் இதன் செயற்பாடுகளில் பங்கு கொண்டு பலமான எதிர்ப்பை செய்யலாம்.

நாளைய சமுதாயம் நற்பெயர் கொண்ட சமுதாயமாக வாழ நாம் வழிக்காட்டிகளாக இருக்க வேண்டும், ஆரோக்கியமான காலடித்தடங்களை விட்டு செல்ல வேண்டும். எமது உழைப்பு ஹலாலாக இருக்க வேண்டும், அதையே எமது குடும்பத்தவர்களும் அனுபவிக்க வேண்டும்.

உழைக்கும் பணங்களை போதைக்காக செலவிடும் ஒவ்வொருவரும், போதைப்பொருள்களை விற்று வாழும் ஒவ்வொருவரும் இறந்தகால செயற்பாடுகளை மறவுங்கள், நிகழ்காலத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள், எதிர்கால சமுகத்தை ஆளுமை உள்ளவர்களாக, ஆரோக்கியமுள்ளதாக மாற்ற இன்றே தயாராகுங்கள்.


WODEPT தொண்டு நிறுவனம் போதை ஒழிப்பு ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை நோக்கி.. 

Post a Comment

0 Comments