பொலிஸ் திணைக்களத்தின் பெளத்த மற்றும் மதவிவ கார சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் நோன்பு துறக்கும் வைபவம் நாளை இடம்பெறவுள்ளது.
பொது ஒழுங்குகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற வுள்ள இந்த நோன்பு துறக்கும் வைபவமானது, கொழு ம்பு ஒல்கொட் மாவத்தையில் உள்ள கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
புனித ரமழான் காலப்பகுதியில் நோன்பு நோற்கும் முஸ்லிம் பொலிஸ் அலுவலர்களுக்கு நோன்பு மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகா சம் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை 2015.06.18ஆம் திகதி தொடக்கம் 2015.07.17 ஆம் திகதி வரை ரமழான் மாதமாக கருதப்படுகின்றது. அதன்படி தினமொன்றுக்கு 14 மணி நேரம் வரை இஸ்லாமிய பக்தர்கள் நோன்பு நோற்கின்றனர்.
சூரியன் அஸ்தமனமாவதோடு அவர்கள் உணவுண்டு நோன்பு துறப்பர். இவ்வாறு நோன்பு துறப்பது ”இப்தார்” என அழைக்கப்ப டுகின்றது.
இந்த முக்கியமான சமய நிகழ்வை முன்னோக்கிக் கொண்டுசென்று இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவது பொலிஸ் திணைக்களத்தின் நோக்கமாகும்.
பொது மக்கள் நல்லுறவுக்கும் குற்றப்பயமற்ற சமூகச் சூழலை நடைமுறைப்படுத்துவத ற்கும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொலிஸார் முன்னெடுக்கும் செயல்களில் ஒன்றாக பொலிஸ் திணைக்க ளத்தின் இந்த சமய அனுஷ்டான நிகழ்வான ”இப்தார்” நிகழ்வை கருத முடியும்.
அதன்படி இம்முறையும் பொது ஒழுங்குகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரது தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கையின் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக் களின் செயலாளர்கள் மற்றும் இஸ்லாமிய பொலிஸ் அலுவலர்கள், இளைப்பாறிய பொலிஸ் அலுவலர்கள் ஊடக பிரதிநிதிகள் உட்பட பல் துறை பிரமுகர்களும் இதில் கலந்துகொள்வர். நாளை 24ஆம் திகதி திகதி புதன் கிழமை பி.ப 5.00 மணி தொடக்கம் இல.331 ஒல்கொட் வீதியில் அமைந்திருக்கும் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலக கட்டட தொகுதியின் 4ஆம் மாடியில் மிகச் சிறப்பான முறையில் இந்த நோன்பு துறக் கும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments