Subscribe Us

header ads

கொழும்பு புறநகர்ப் பகுதியில் மாட்டிறைச்சி – கோழி இறைச்சி விற்பனை தொடர்பில் ரிசாதிடம் முறைப்பாடு


தலைநகர் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி எனபன உரிய தரத்திலும்,விலையிலும் விற்கப்படாதது தொடர்பில் நுகர்வோர் பல முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகார சபைக்கு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் இவ்வாறான விற்பனை நிலையங்களை கண்டறியும் வகையில் விசேட சுற்றிவளைப்பு அதிகாரிகளை கொண்ட குழுக்களை ஈடுபடுத்துமாறு நுகர்வோர் அதிகார சபையின் தலைவருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.


கொழம்பில் பல இடங்களில் விற்கப்படும் மாட்டிறைச்சியின் விலை தொடர்பில் நுகர்வோர் முறைப்பாடுகளை செய்துவருவதாகவும்,மாட்டிறைச்சிகள் சுகாதார விதி முறைக்கமைய பாவனையாளர்களுக்கு வழங்கப்படாமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகள் விறபனை கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம் காட்ச்சிபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் கொள்ளை லாபங்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளுவதாகவும் கூறினார்.


தற்போது கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாட்டுக்கைமைய முதற்கட்டமாக திடீர் சுற்றி வளைப்பு அதிகாரிகள் தலைநகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஈடுடுத்தப்பட்டுள்ளதாகவும்,இவ்வாறு தரம் பேனாமல் விற்பனை செய்யப்படும் இறைச்சி விற்பனை நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Post a Comment

0 Comments