நாட்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பது தங்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை மறைத்துக்கொள்வதற்கே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளான இன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கண்டி விகாரைக்கு சென்று மத வழிப்பாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மறைத்து கொள்வதற்காகவே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments