மைத்திரியும் மஹிந்தவும் இணைந்தால் தாம் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாம்நிலை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரானவர்களை பழிவாங்கவே மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வரத்துடிக்கிறார் என்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த செல்கின்ற விஹாரைகளில் சாது சாது என்ற சொல்வதற்கு பதிலாக ஜெயவேவே என்ற சத்தத்தையே கேட்கமுடிகின்றது.
இது வெட்கப்படவேண்டிய செயல் என்றும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments