குடம்ப நலனிற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
சில லாபமீட்டும் அரச நிறுவனங்களின் வருமானத்தை மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரச்சாரத்திற்கும் குடும்ப நலத்திற்காகவும் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய நிறுவனங்களில் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களின் லாபங்கள் திறைசேரிக்கு செல்ல வேண்டும் என்ற போதிலும் அந்தப் பணம் வேறும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


0 Comments