பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி - பேராதனை வீதியில் உள்ள கலஹா சந்தியில் இன்று அடையாள சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறந்த பல்கலைக்கழக மாணவர்களது சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 200ஆவது நாள் பூர்த்தியாவதை முன்னிட்டு இதனை ஒழுங்கு செய்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டம் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. மாணவர்களது தொடர்ந்து போராடி வந்த போதும் அதிகாரிகள் எவரும் இதுவரை அவ்விடத்துக்கு வருகைத் தரவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments