இயந்திரப் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் முன்னேஸ்வரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையுடன் இணைந்து சில காலமாக இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் தாயும், தந்தையும் இதற்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக இவர்களால் ஐந்து முதல் எட்டு இலட்சம் வரையிலான பணம் அறவிடப்பட்டுள்ளது.
சிலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் இவர்கள் அந்தப் பிரதேசங்களை விட்டு தலைமறைவாகி வந்திருப்பமை பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments