ஹெரோயின் வில்லைகளை விழுங்கியதாக சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தான் இளைஞரின் உடலில் இருந்து 34 ஹெரோயின் வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நபர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், சுங்க அதிகாரிகளினால் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுங்க அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபர், ஹெரோயின் வில்லைகளை விழுங்கி அவற்றை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.


0 Comments