Subscribe Us

header ads

வித்தியாசமான குழந்தையின் போட்டோவுடன் குறிப்பிட்டுள்ள அந்த செய்தி பரவலாக முகநூலில் உலா வருவதும்! அதன் உண்மை நிலையும்!


மேலே படத்தில் ஒரு வித்தியாசமான குழந்தையின் போட்டோவுடன் குறிப்பிட்டுள்ள அந்த செய்தி பரவலாக முகநூலில் உலா வருவதை காண முடிகிறது.
இதில் பாதி ஹதீஸை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள் அந்த முழு ஹதீஸையும், மேலும் இந்த குழந்தைக்கும் மறுமை நாளின் அடையாளத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை தற்போது பார்ப்போம்.

6530. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) “ஆதமே!“ என்று அழைப்பான்.

அதற்கு அவர்கள் “(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்“ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் “(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்“ என்று கூறுவான்.
ஆதம் (அலை) அவர்கள் “எத்தனை நரகவாசிகளை?“ என்று கேட்பார்கள்.
அதற்கு அவன் “ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)“ என்று பதிலளிப்பான்.
(அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகிற நேரம் இதுதான்.
மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள்.
மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.

இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, அவர்கள் “இறைத்தூதர் அவர்களே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?“ என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் “(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்“ என்று கூறிவிட்டுப் பிறகு, “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்“ என்று கூறினார்கள்.
உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழக்கமிட்டோம். பிறகு, நபி(ஸல்) அவர்கள் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன்.
மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்“ என்றார்கள்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்.

மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ் மற்றும் அந்த குர்ஆன் வசனம் தீர்ப்பு நாளன்று நடக்கும் நிகழ்வை தான் குறிக்கிறதே தவிர மறுமை நாளின் அடையாளத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதை இந்த ஹதீஸை படிக்கும் போதே தெளிவாக நாம் விளங்கி கொள்ள முடிகிறது….
மேலும் தஜ்ஜாலின் வருகை, ஈசா நபியின் வருகை உள்ளிட்ட மறுமை நாளில் ஏற்பட கூடிய பெரும் அடையாளங்கள் முதல் அரபு தேசத்தில் பாலைவனம் சோலைவனமாகும்,
கொலைகள் பெருகும் உள்ளிட்ட சிறிய அடையாளங்கள் வரை அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன் அறிவிப்பு செய்துள்ளார்கள்.
ஆனால் அதில் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வு மறுமை நாளின் அடையாளம் என்று எந்த ஒரு ஹதீஸும் இல்லை.
எனவே இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அந்த குழந்தை அவ்வாறு பிறக்க காரணம் சத்திண்மையாக/விட்டமின் குறைபாடாக கூட இருக்கலாம் எனவே இந்த குழந்தை படத்திற்கும் அந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை!
இதுபோன்ற செய்திகள் கிடைத்தால் இதை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸில் ஏதாவது விளக்கம் உள்ளதா, இதன் நம்பகத்தன்மை பற்றி எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் அதனை அப்படியே பரப்புவதும், மாஷா அல்லாஹ், சுபுஹானல்லாஹ் என்று கமெண்ட் செய்வதும் முட்டாள்தனமான செயலாகும் என்பதை முஸ்லிம்கள் விளங்கி கொள்ள வேண்டும்!
இப்படி கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புபவர்களை பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை பாருங்கள்…
“ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்….
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம்

Post a Comment

0 Comments