Subscribe Us

header ads

அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபரே இது உங்கள் கவனத்திற்கு!


பாடசாலைக்கு சொந்தமான, பாவனைக்கு உதவாத தளபாட பொருத்துக்கள் தனியார் வளவினுள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அல் அக்ஸாவின் வளாகத்துடன் அண்மித்த இடத்தில் பிரதான வீதில் இது இருப்பதாலும், பாடசாலை விடுமுறை காலம் என்பதாலும் இது தொடர்ப்பாக பொது மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

இவை அல் அக்ஸாவின் உடைமைகள் இல்லாமல் வேறு எங்கும் பெறப்பட்ட தளபாட பொருத்துக்களா?

அல் அக்ஸாவின் உடைமை என்றால்; இவை வெறும் இரும்புகள் என விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

இவை பாடசாலைக்கு தெரியாமல் திருடப்பட்டுள்ளதா?

இவை முறைப்படி விற்பனை செய்தால் இது தொடர்பாக பொது அறிவித்தல் விடபபட்டுள்ளதா?

இவை திருடபட்டால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா?

அல்லது இது இலவசமாக தனி நபர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?
இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் பாடசாலையின் அதிபர் இது தொடர்பில் உண்மை நிலையின் அறிந்து பொது அறிக்கை ஒன்றை வெளியட வேண்டும் என்று பாடசாலை நலன்விரும்பிகள் வேண்டுகின்றனர்.

பாடசாலை நலன்விரும்பிகள்







Post a Comment

0 Comments