தற்போது விமான பயணிகள் 15 கிலோ வரையிலான லக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி விமானங்களில் எடுத்துச் செல்லலாம். அதற்கு கூடுதலாக கொண்டு செல்கிறவர்கள் ஒவ்வொரு கிலோவுக்கும் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது.
இதை ரத்து செய்து பயணிகள் எடுத்துச் செல்லும் ஒவ்வொரு கிலோ லக்கேஜூக்கும் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு 3 தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள், சிவில் விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
அதே நேரம் எந்த லக்கேஜையும் எடுத்துச் செல்லாத பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கலாம் என்றும் இந்த விமான நிறுவனங்கள் யோசனை தெரிவித்து உள்ளன. இத்திட்டத்துக்கு இந்தியாவில் உள்ள மற்ற தனியார் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பரிந்துரையை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரக தலைமையும் ஏற்றுக்கொண்டு உள்ளது.
இது குறித்து இத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த பரிந்துரை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும் இதை அமல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து விமான நிறுவனங்களும் ஒரே சீரான நடைமுறையை உருவாக்கிட நாங்கள் விரும்புகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.


0 Comments