Subscribe Us

header ads

தென் ஆப்பிரிக்காவில் முள்ளம் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு சாவு...


மலைப்பாம்பு மிகப் பெரிய மிருகங்களையும், ஏன் மனிதர்களை கூட விழுங்கி ஏப்பம் விடும் உயிரினம். ஆனால் முள்ளம் பன்றியை விழுங்கிய ஒரு ராட்சத மலைப்பாம்பு அகால மரணம் அடைந்தது.

தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான மிருக காட்சி சாலை உள்ளது. அங்கு மலைப்பாம்பு, சிங்கம், புலி உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

அங்கு இருந்த 3.9 மீட்டர் நீள மலைப்பாம்பு ஒன்று முள்ளம் பன்றியை விழுங்கியது. அது 13.8 கிலோ கொண்டது. அந்த முள்ளம் பன்றியை விழுங்கிய சிறிது நேரத்தில் அந்த மலைப்பாம்பு இறந்து விட்டது. அது வன ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு உயிரினத்தை விழுங்கிய மலைப்பாம்பு அதை செரிக்க செய்ய வயிற்றுக்குள் இருந்து மீண்டும் வாய்க்கு கொண்டு வரும்.

அவ்வாறு செய்த போது முள்ளம் பன்றி உடலில் இருந்த முற்கள் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் குத்தி கிழித்து அதனால் அது இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.




Post a Comment

0 Comments