முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக விரைவில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்கவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்தவுக்கு வழங்கும் அதேவேளை, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரி குடியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் சட்டத்தின் படி முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு இரு வீடுகளை அரசாங்கம் வழங்கலாம். 105 பொலிஸாரையும்,14 அதிகாரிகள் உட்பட 104 இராணுவத்தினரை முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என வழங்கியுள்ளோம்.
மஹிந்தவின் குண்டு துளைக்காத பென்ஸ் கார் மற்றும் BMW ராக வான் ஆகியவற்றை தனது தேவைக்கு பயன்படுத்துகின்றார். அவரது பாதுகாப்பிற்கு 21 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாங்கள் அவரிற்கு உரிய பாதுகாப்பை வழங்கியுள்ளோம், தேர்தல் சமயத்தில் அதனை அதிகரிக்க நாங்கள் தயாராகவுள்ளோம் என ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போது இந்த விடயங்களை குறிப்பிட்டார்.


0 Comments