Subscribe Us

header ads

ஒளிக்கீற்று இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள் 1436-2015

அஸ்ஸலாமு அலைக்கும்


ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஒழுங்கமைப்பிலும், ஏற்பாட்டிலும் மாபெரும் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்ஷா அல்லாஹ்.

14 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் இப் போட்டியில் பங்குபற்ற முடியும் என்பதுடன், போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெருபவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும், சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

14 – 16 வயதுடையவர்கள் முதலாம் பிரிவாகவும், 17 – 20 வயதுடையவர்கள் இரண்டாம் பிரிவாகவும், 21 – 35 வயதுடையவர்கள் மூன்றாம் பிரிவாகவும் 36 வயதுக்கு மேற்பட்டோர் நான்காம் பிரிவாகவும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெறலாம்.

அல் கிராஅத், இஸ்லாமிய கீதம், பேச்சுப்போட்டி, அதான் கூறுதல், கஸீதா, அறிவுக்களஞ்சிய எழுத்துப் போட்டி, ஓரங்க நாடகம், மேடைக் கவிதை போன்ற நிகழ்ச்சிகள் மேற்படி வாயதெல்லைகளுக்கு ஏற்ப குறித்த தலைப்புகளுக்குள் நடாத்தப்படும்.

போட்டியாளர்கள் போட்டிக்கான விண்ணப்ப படிவத்தையும், விபரக்குறிப்பையும்  “ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தில்” பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்ப இறுதித் திகதி 03.07.2015 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரையுமாகும்.

போட்டிகள் 07.07.2015 (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிமுதல் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெறும்.

பரிசளிப்பு நிகழ்வுகள் 11.07.2015ம் திகதி மாலை 3 மணிமுதல் புத்தளம் நுஹ்மான் வரவேற்ப்பு மண்டபத்தில் ஆரம்பித்து இப்தார் நிகழ்வுடன் நிறைவடையும்.

மேலதிக விபரங்களுக்கு,
ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்,
இல. 31, போல்ஸ் வீதி,
புத்தளம்.

இப் போட்டி நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள சகலரும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.
போட்டி ஏற்ப்பட்டு குழு சார்பாக,

ஏ.எச்.எம். ரிஸ்வான்.

Post a Comment

0 Comments