போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சோப்ரல் தலைமையிலான குழுவும், நெதர்லாந்தில் லெய்டன் வானிலை ஆய்வு மையமும் இணைந்து ‘வி.எஸ்.டி.’ எனப்படும் மிகப்பெரிய டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் உள்ள விண்மீன் கூட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் மூலம் பல அரிய அதிசயமான விண்மீன் கூட்டங்களை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மிகவும் பிரகாசமான விண்மீன் கூட்டத்தை கண்டு பிடித்துள்ளனர். சி.ஆர்.7 எனப்படும் அந்த விண்மீன் கூட்டத்துக்கு பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் சூட்டியுள்ளனர்.
இது மற்ற விண்மீன் கூட்டத்தை விட மிகவும் பிரகாசமாக உள்ளது. இதில் நீலம் மற்றும் சிவப்பு நிற விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அவை அலை அலையாக தெரிவதாக விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் சோப்ராஜ் தெரிவித்துள்ளார்.
0 Comments