Subscribe Us

header ads

பௌத்த சூழலில் வளர்ந்த 11 வயதான முஹம்மத் அயாஷ்ஷின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது !!


மீரிகம, அம்பன மகா போதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவனின் ஜனாஸா நேற்று கல்லெலிய முஸ்லிம் மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த சிறுவர் இல்லத்தில் பௌத்த சூழலில் வளர்ந்த 11 வயதான முஹம்மத் அயாஷ் நேற்று முன்தினம் காலை பாடசாலை செல்லும் போது மீரிகமை பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இவரின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் வத்துபிடிவல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என சிலர் கூறினர்.
இதனால் பொலிஸ் மற்றும் சிறுவர் நலத் திணைக்களத்தின் அனுமதியோடு கல்லெலியா முஸ்லிம் மைய வாடியில் நலடக்கம் செய்யப்பட்டது.
குறித்த சிறுவனின் ஜனாஸாவை பள்ளிவாசலுக்கு கொண்டுவந்த போது மீரிகம சாசன பீடாதிபதி மற்றும் பல பௌத்த மதத் தலைவர்கள் சிங்கள மற்றும் ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் கலந்துகொண்டு, ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.
-Lankadeepa-



Post a Comment

0 Comments