Subscribe Us

header ads

மதநல்லிணக்கத்தின் முதற்படி: முஸ்லிம்களுடன் சேர்ந்து நோன்பிருந்த இந்து நண்பர்கள்


யோகாசனத்தில் சூரிய வழிபாட்டை நீக்க வேண்டும் என ஒரு பிரிவினர் வாதம் செய்துவரும் அதே வேளையில், எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை என உலகுக்கு பறைசாற்றும் விதமாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாகவும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இந்துக்களில் சிலர் தங்கள் பகுதியில் வாழும் முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து ரம்ஜான் நோன்பை நோற்று மகிழ்ந்தனர்.


இங்குள்ள மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த 21 இந்துக்கள் உள்பட சுமார் 70 பேர் ரம்ஜான் நோன்பின் துவக்க நாளான நேற்று நோன்பு நோற்றபடி இங்குள்ள உடால் சவுக் பகுதியில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். சமூக  நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்த இந்த நிகழ்ச்சியில் உள்ளூரில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments