பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உலகின் மிக உயர்ந்த ஸ்மார்ட் சூட்கேஸ் அறிமுகமாகியுள்ளது. ஸ்பேஸ் கேஸ்-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த சூட்கேஸில் யாரும் திருட முடியாத வகையில் டிஜிட்டல் பயோமெட்ரிக் லாக் பாதுகாப்பு வசதி தரப்பட்டுள்ளது. அதேபோல், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தரப்பட்டுள்ளதை போல சென்சார்களுடன் கூடிய ஆன்டி-தெப்ட் அலாரமும் உள்ளது. சூட்கேஸின் எடையை கண்டறியும் வகையில் டிஜிட்டல் லிப்ட் லெஸ் வெயிட் சிஸ்டமும் தரப்பட்டுள்ளது. இதுதவிர குளோபல் டிராக்கர் வசதியும் உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பயணம் செய்யும் போது நமது ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ள 12 ஆயிரம் எம்.ஏ.எச் பவர் பேங்க்கும் இணைக்கப்பட்டு வெளிவருகிறது. இதன் வாயிலாக ஒரு நேரத்தில் 7 முறை நமது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காகவே பிரத்யேகமாக சூட்கேஸின் முன்பகுதியில் 2 எக்ஸ்டர்னல் யூ.எஸ்.பி. சார்ஜிங் போர்ட்டுகள் தரப்பட்டுள்ளன.
அதேபோல், பயோமெட்ரிக் ஸ்கேனர் வசதி வழியாக நாம் கைரேகையை பதிவு செய்து சூட்கேஸை திறக்கலாம். ஸ்மார்ட்போன் மூலமும் இந்த சூட்கேஸை கட்டுப்படுத்த முடியும். இதற்காக பிளானட் டிராவலர் என்ற ஆப்ஸூம் தரப்பட்டுள்ளது.


0 Comments