உடற்குறைபாடுகள் கொண்ட நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், உலகின் அவலட்சணமான நாயைத் தேர்ந்தெடுக்கும் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 27 நாய்கள் தங்கள் உரிமையாளருடன் கலந்து கொண்டன.
இதில் நீதிபதியாக உள்ளவர்கள் நாய்களை முதலில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு, அதன் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், இயற்கையான அழகற்ற தன்மை, ரசிகர்களின் உணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உலகின் அவலட்சணமான நாயை தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான உலகின் அவலட்சணமான நாயாக அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயதான ’க்வாசி மோடோ’ என்ற பிட்புல் மற்றும் டச்சு இனக்கலப்பு நாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வருடமாக நடத்தப்படும் இந்த விழாவிற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் நாய்களை வளர்க்கும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.






0 Comments