இலங்கையில் வருகிற ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதை தொடர்ந்து அதிபர் மைத்ரியபால சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை தேர்தல் கமிஷன் மேற் கொண்டுள்ளது. அது குறித்து இலங்கை தேர்தல் கமிஷனர் மகிந்த தேச பிரியா நேற்று கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது சட்ட விரோதமாகும். எனவே, அது போன்ற ‘‘சட்ட விரோத முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.
அதற்கு முந்தைய தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து தற்போது இந்த கடும் நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலின் போது தேர்தலை சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை தலையில் சுட்டுக் கொல்ல தேர்தல் கமிஷனர் தேச பிரியா போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.


0 Comments