Subscribe Us

header ads

வானவில் நிற முகப்புப்படத்தால் திருமண சமத்துவத்தைக் கொண்டாடிய பேஸ்புக்...



சுய பாலின ஈர்ப்பு கொண்டவர்களுக்கு சம உரிமை, மற்றும் திருமணம் செய்யும் உரிமை வழங்க அமெரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைக் கொண்டாடும் விதமாக தங்கள் முகப்புப்படத்தை(Profile picture) வானவில் நிறத்தில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள்(கே மற்றும் லெஸ்பியன்) திருமணம் செய்துகொள்ள தடை இல்லை என்ற அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைக் கொண்டாடும் வகையில், facebook.com/celebratepride  என்ற சுட்டியைக் க்ளிக் செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் முகப்புப்படத்தை வானவில் நிறத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. 

முன்னதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், தனது முகப்புப்படத்தை இந்த வானவில் நிறத்தால் அலங்கரித்துக் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆப்பிள், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த தீர்ப்பிற்கு தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான எல்.ஜி.பி.டி(Lesbian, Gay, Bi-Sexual, Transgenders) ஆதரவாளர்கள் தங்கள் பேஸ்புக் முகப்புப்படத்தை வானவில் நிறத்தில் மாற்றிக் கொண்டனர். 

Post a Comment

0 Comments