Subscribe Us

header ads

ரசிகர் உருவாக்கிய உண்மையான அயர்ன் மேன் லேசர் துப்பாக்கி கையுறை - குவியும் ஆர்டர்கள்: வீடியோ இணைப்பு



ஹாலிவுட் ஆக்‌ஷன் படமான அயர்ன் மேன் வரிசை படங்களை பார்க்காத திரைப்பட ரசிகர்களை காண்பது வெகு அரிது. இது போன்ற படங்களுக்கு தீவிர ரசிகரான ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் உண்மையான அயர்ன் மேன் லேசர் துப்பாக்கி கையுறையை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


ஒரு ஆய்வகத்தில் உதவியாளராக பணிபுரிந்த வந்த பேட்ரிக், பொழுது போக்காக அயர்ன் மேன் லேசர் துப்பாக்கி கையுறையை செய்துள்ளார். ஆனால் தற்போது வேலையை விட்டுவிட்டு லேசர் துப்பாக்கி கையுறையை செய்வதே முழு நேர வேலையாக செய்யும் அளவிற்கு இவரது கையுறைக்கு பல திரைப்பட ரசிகர்கள் ஆர்டர்கள் கொடுத்து காத்திருக்கிறார்கள்.



பேட்ரிக் உருவாக்கிய உண்மையான அயர்ன் மேன் லேசர் துப்பாக்கி கையுறை நீலம் மற்றும் சிகப்பு நிற லேசர் கதிர்கள் மூலம் தீயை உண்டாக்கி பொருட்களை எரிக்கிறது. சிறிய உலோக தகடுகளை குறிப்பிட்ட இலக்கு மீது வேகமாக வீசி அடிக்கவும் செய்கிறது. வீட்டில் இருந்தபடியே வேலை செய்துவரும் பேட்ரிக், தற்போதைக்கு தனது முழு நேர ஆய்வக உதவியாளர் பணிக்கு திரும்ப போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments