Subscribe Us

header ads

ஊழல்வாதிகள், கெசினோ, குடு, போதை, மோசடிக் காரர்களுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்


மோசடிகாரர்கள், ஊழல்வாதிகள், சிறுவர் துஸ்பிரயோகிகள், கெசினோகாரர்கள், குடுகாரர்கள், போதைப், மது வியாபாரிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம் என கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொள்வதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தனது கையில் உள்ள வாக்கினை அளிப்பதற்கு முன்னர் யாருக்கு? எதற்கு? அளிக்கிறோம் என்பதனை சிந்திக்க வேண்டும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைப்பது தொடர்பில் மார்ச் 12 அமைப்பு கொழும்பில் இன்று (25) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் என்ற ரீதியில் தாம் தவறு இழைத்துள்ளதாகவும் அதன் பிரதிபலன்களை அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலவேளை, இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை தேர்தலில் இறக்கக் கூடும் என்றும் அதில் சிறந்த பேய் தெரிவில் சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும், தேர்தலுக்கு பணம் கிடைப்பது, செலவு செய்வது போன்றவை வெளிப்படுத்தப்பட வேண்டும், வங்கிக் கணக்கு சோதனை செய்யும் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments