தனது சொத்தினை சுவீகரிக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த கடிதம் ஒன்று அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்காக தாம் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முறையாக செலுத்தி இருப்பதாகவும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க வசிக்கும் கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள இல்லத்தின் இந்த வருடத்துக்கான வரிப்பணம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பணம் செலுத்தப்படாத பட்சத்தில், குறித்த இல்லம் மற்றும் காணி என்பன மாநகரசபையினால் சுவீகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


0 Comments