-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தொகுதி பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு, அரசாங்கத்தினால் அரச அலுவலர்களுக்கு தீர்வையற்ற முறையில் வழங்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் ஒரு தொகுதி சனிக்கிழமை (27) காலை கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எச். சுமனசேன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சக்தி ஏரி சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் சரத் குமார, புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சதுங்கஹவத உள்ளிட்ட உதவி பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




0 Comments