ஆந்திராவில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவரின் 7 வயது மகள் லாவண்யா கடந்த 16ம் திகதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடியபோது சிறுமியை பெட்டிகடை நடத்தி வந்த கனிகந்தி சுரேஷ் என்ற இளைஞர் அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாகக் கிராமத்தினர் மடப்பள்ளியில் உள்ள சுரேஷ் வீட்டில் தேடிய போது, வீட்டில் இருந்த இரும்பு பெட்டியில் சிறுமியின் பிணம் நிர்வாணமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரிய வந்ததை அடுத்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து சுரேசை தேடி வந்தனர். இந்நிலையில் தலை மறைவான சுரேஷை ஏலுர் பேருந்து நிலையத்தில் பார்த்த கிராம மக்கள் அவனைப் பிடிக்க முயன்றனர். அவன் பிடிபடாமல் தப்பி ஓடியபோது பொது மக்கள் விடாமல் விரட்டியுள்ளனர். இந்த தகவலை அறிந்த பொலிசாரும் அங்கு வந்து சுரேசை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தில் ஓடிய சுரேஷ் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில், பலத்த காயம் அடைந்துள்ளான். அவனை மீட்க பொலிசார் முயன்ற போது, ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்களால் சுரேசை தாக்கியுள்ளனர். பொலிசார் அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற போதும், கோபம் குறையாத மக்கள், சுரேஷை சாகும்வரை அடித்து கொன்றுள்ளனர். இதனால் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இறந்துள்ளான். தற்போது இந்த சம்பவத்தினால் ஆந்திராவில் பரபரப்பு நிலவுகிறது. |
0 Comments