கனடா- ஒன்ராறியோ, கொலிங்வூட் என்ற இடத்தில் 30வயது மனிதன் ஒருவர் 40-அடிகள் உயர பாறைக்குகைக்குள் விழுந்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.
சனிக்கிழமை இரவு 8மணியளவில் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த நடைபயணக்காரர்கள் இவரது சத்தத்தை கேட்டுள்ளனர்.
ஒன்ராறியோ மாகாண பொலிசார், பார்ரி மற்றும் ரொறொன்ரோ மீட்பு குழுவினர்கள் 13மணித்தியாலங்கள் முயன்று ஞாயிற்றுகிழமை காப்பாற்றினர்.
சனிக்கிழமை பிற்பகல் 12மணிக்கு பின்னர் இவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறு குகைக்குள் அகப்பட்டுக்கொண்டார் என்பது தெளிவாகவில்லை ஆனால் இவர் ஒரு கூர்மையான கோணத்தில் அகப்பட்டு கொண்டதால் அண்மிப்பது கடினமாக இருந்துள்ளது.
மீட்பு பணியாளர்கள் சில பாறைகளை துளையிட்டு மனிதனை அண்மித்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமை காலை 10மணியளவில் விடுவிக்கப்பட்டார். மீட்பு குழுவினர் மீட்பு முயற்சியில் ஈடுபட்ட வண்ணம் அவருக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்துள்ளனர்.






0 Comments