அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் வீட்டின் மீது பீச்கிராப்ட் என்ற இலகுரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.
இச்சம்பவத்தின் போது அந்த வீட்டில் வசித்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
போஸ்டன் நகருக்கு தென்மேற்காக 35 மைல் தொலைவில் உள்ள பிளென்வில்லே நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் இவ்விபத்து நேரிட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எனினும் பலியானவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இச்சம்பவத்தில் வீட்டின் மீது தீப்பற்றியதால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.




0 Comments