Subscribe Us

header ads

பறக்கும் ரெயிலை விட மெட்ரோ ரெயில் பாதுகாப்பானது: பொதுமக்களின் முதல் பயண திரில் அனுபவம்


மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் பற்றி பயணிகள் கூறியதாவது:–

சரஸ்வதி (பரங்கிமலை):– மெட்ரோ ரெயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை பயணம் செய்தது கிடையாது. இன்று முதல் முறையாக பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடும்பத்துடன் வந்தோம்.

ரெயில் நிலையமே பளிச்சென்று சொர்க்கலோகம் போல் காட்சியளிக்கிறது. ஏதோ வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையில் பறக்கும் ரெயிலில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன்.

ஆனால் இந்த ரெயிலில் அதே போல் படிக்கட்டில் யாரும் நிற்க முடியாது. கதவுகள் மூடிக் கொள்வதால் பயணம் பாதுகாப்பாக இருக்கிறது. ரெயில் முழுவதும் சில்லென்று ஏ.சி. குளிர் இருப்பதால் பயணமே ஒரு திரில்லிங்காக இருக்கிறது.

ஜோன்னா (தி.நகர்):– முதல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது சரித்திரத்தில் இடம் பிடித்தது போல உள்ளது. இதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. பரங்கிமலை மீது நின்றால்தான் சென்னையின் அழகை பார்க்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது மெட்ரோ ரெயிலில் சென்றாலே சென்னையின் அழகை ரசிக்கலாம்.

இந்த ரெயில் பயணம் ரொம்ப பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சிரமம் இல்லை. தலைவலி இல்லை. வெயில் தெரியாது. போக்குவரத்து நெரிசல் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருக்கு, இப்படி இருக்கு என்று பெருமைப்பட்டு பேசுவோம். இப்போது அதை சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் மூலம் சொகுசாக அனுபவிக்கிறோம்.

கல்யாணி (மடிப்பாக்கம்):– நானும், எனது கணவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மெட்ரோ ரெயிலில் செல்கிறோம். முதல் நாளிலேயே மெட்ரோ ரெயிலில் சென்றது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. இனி வடபழனி, கோயம்பேட்டுக்கு நாங்கள் மெட்ரோ ரெயிலிலேயே பயணம் செய்வோம்.

பூஜா (வடபழனி):– மிக உயரமான மேம்பாலத்தில் ரெயில் போகும்போது சென்னை நகரை பார்க்கும் அழகே தனி. அழகாக தெரிகிறது. கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் செல்லும் போது தாழ்வாக பறந்து விமானம் தொட்டு விடும் தூரத்தில் செல்வது போல் பார்க்க பிரம்மிப்பாக உள்ளது.









Post a Comment

0 Comments