குவைத்தில் உள்ள அல் சாதிக் மசூதியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) 2 ஆயிரம் பேர் திரண்டு, தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி அதி பயங்கர தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் 27 பேர் உடல் சிதறி பலியாகினர். 222 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவம் நடந்த மசூதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட மன்னர் சபா அல் அகமது அல் ஜபிர், கடும் கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 18 பேர், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குவைத் மந்திரிசபை அவசரமாக கூடி முடிவு எடுத்ததின்படி, நேற்று அங்கு ஒரு நாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டது.


0 Comments