(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 12 ஆம் கொளனி ஆலயடி பிரதேசத்தில் (20) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், சாரதிக்கு எதுவித ஆபத்தும் இல்லை எனவும் மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.
இருவர் பயணித்த சிறியரக டிப்பர் வாகனம் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள வாய்க்காலில் வீழ்ந்து முழ்கியதில் சாரதிக்கு அருகில் ஆசனப்பட்டியணிந்திருந்தவர் தப்பிக்க முடியாது அவஸ்தைப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் பொதுமக்களின் முயற்சியினால் மீட்கப்பட்டு மத்தியமுகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இவ்வாறு தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் மருதமுனையை சேர்ந்த முஸ்தபா எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments