அபு அலா -
அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் தொண்டர் அடிப்படையில் கடந்த பல வருடங்களாக கடமையாற்றிவரும் சிற்றூழியர்கள் தங்களின் நிரந்த நியமனத்தை கோரி நேற்று முன்தினம் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் கோரிக்கைக்கு அமைவாகவே முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கும் அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்குமிடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, குறிப்பிட்ட சிற்றூழியர்கள் தங்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தனர்,
தாங்கள் கடந்த பல வருடங்களாக தொண்டர் அடிப்படையில் தொழில் புரிந்துகொண்டு பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும், தங்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை எனவும் தாங்கள் முதலமைச்சர் பதவிக்கு வந்து பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்.
மக்களின் பிரச்சினைகளுக்கு, அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கும் தாங்கள் பதவியேற்ற சொற்ப காலப்பகுதியில் பல தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள். எனவே கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தங்களின் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு ஒரு தீர்வினை பெற்றுத்தருமாறும் வேண்டினர்.
இதுதொடர்பில், ஒரு தீர்வினை பெற்றுத்தர தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் வாக்குருதியளித்தார்.
0 Comments