இந்தியாவின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மஹேந்திர அஹிர்வால் எனும் 12
வயது சிறுவனுடைய தலை, கழுத்துப் பகுதியில் வளைந்து பின்புறமாகத் தொங்கிக்
கொண்டிருந்தது.
இந்த சிறுவனின் பெற்றோர் வறுமையில் வாடியதால் அவனது சிகிச்சைக்காக உலகெங்கும் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இந்த சிறுவன் சிகிச்சை பெற்று குணப்படுத்தப்பட்டுள்ளான்.
அத்துடன், முதுகு அறுவை சிகிச்சை நிபுணரான ராஜகோபாலன் கிருஷ்ணன்
என்பவர், சிறுவனது உடல்நலத்தை மேலும் தேற்றுவதற்கு தம்மால் முடியும் எனவும்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.






0 Comments