ஊடகப் பிரிவு
கல்முனை அபிவிருத்தியில் ஊழல் மோசடி ஏதும் இடம்பெற்றிருந்தால் உலமாக் கட்சி தலைவர் முபாறக் மௌலவியினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட முடியுமா? என சவால் விடுக்கின்றோம். அத்தோடு அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளதா? எனவும் கேட்கின்றோம் என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது,
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் பெயரை வைத்து அரசியலில் பிரபல்யம் அடைய முனையும்; உலமாக் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு உலமா என்ற கன்னியமான பெயரை வைத்துக்கொண்டு வீண்பழி சுமர்த்தும் நடவடிக்கையை கைவிடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
கல்முனை அபிவிருத்திற்கு நிதியை கொண்டு வரத்தெரியாதவர், அபிவிருத்தி செய்யத் தெரியாதவர் என்றெல்லாம் ஊடகங்கள் வாயிலாக ஹரீஸ் எம்.பிக்கு எதிராக கூக்குரலிட்ட உலமாக் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கல்முனை அபிவிருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் வழங்கிய ரூபா 250 கோடிக்கு என்ன நடந்தது? என விளக்கம் கோரியுள்ளளார்;. இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை அபிவிருத்திற்கு நிதியினை கொண்டு வந்துள்ளார் என்பதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக முதலில் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஊடக பிரபல்யத்திற்காக பாராளுமன்ற உறுப்பினரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி மக்களை பிழையாக திசை திருப்பும் ஒரு அரசியல் பச்சோந்தியாக செயற்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
கல்முனை அபிவிருத்திற்கான ரூபா 250 கோடி நிதியினை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினரிடம் பெட்டியில் வைத்து கையில் கொடுக்கவில்லை. கல்முனை அபிவிருத்திக்கான வழங்கப்பட்ட நிதிகள் அனைத்தும் அரச நிதிப் பிரமாணங்களுக்கு அமைவாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இதனை புரியாமல், தெரியாமல், விசாரிக்காமல் ஊடகங்கள் வாயிலாக கூக்குரல்யிடுவது அவரின் சிறுபிள்ளைத் தனத்தை காட்டுகிறது.
திதுலன – கல்முனை, திதுலன – திகாமடுல்ல எனும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸாகும். இவரினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் முடிவுற்றும், நடந்து கொண்டிருக்கின்றன என்பதை இந்த அறிக்கை மன்னர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
பூட்டிய அறைக்குள் உலமாக் கட்சியை வைத்துக் கொண்டு முபாறக் மௌலவி ஊடகங்களிலும், முகநூலிலும் அறிக்கைகளை மட்டும் விடுவது அரசியலல்ல. உங்களால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடிந்தால் முயற்சியுங்கள். எல்லாவற்றிக்கும் அறிக்கைகளை விடுவதனால் தங்களின் அறிக்கைகளை மக்கள் காமெடியாக பார்க்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கல்முனை சாஹிபு வீதியின் அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டு காணப்பட்டது எல்லோரும் அறிந்த விடயம். தடைப்பட்டமைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும், ஒப்பந்தகாரரதும் செயற்பாடே காரணமாகும். இன்று இவ்வீதி அபிவிருத்தி பணியில் காணப்பட்ட தடங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் சீர்செய்யப்பட்டு இவ்வீதியின் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு இவ்வீதி அபிவிருத்திப் பணியின் செயற்பாடு இருக்கையில் முபாறக் மௌலவி இவ்வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி மறைக்கப்பட்டிருந்தது என்றும் தற்போது முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் இது பற்றி வாய் திறந்து விடுவார் என்ற காரணத்தினால் அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுவதாக கூறியுள்ளமை உண்மைக்கு புறம்பானதாகும்.
நாட்டில் இன்று நல்லாட்சி இடம்பெறுகின்றது. உலமாக் கட்சி தலைவர் கூறுவதைப் போல் ஊழல் மோசடி ஏதும் கல்முனை அபிவிருத்தியில் இடம்பெற்றிருந்தால் அவரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிட முடியுமா? அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளதா? எனக் கேட்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம் மக்களின் உணர்வோடு இணைந்ததான அரசியலை செய்துவருபவர். அவரின் அரசியல் வருகை போராட்ட ரீதியான அரசியலாகும். இதனை அவர் இன்றும் முஸ்லிம் மக்களுக்காக செய்து வருகிறார். அதற்கு சமாந்திரமாக அவர் அபிவிருத்தி அரசியலையும் வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு செய்து வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 Comments
mubarak mowlavi is a loosu payal
ReplyDelete