Subscribe Us

header ads

புத்தளத்தில் முதன்முறையாக நடைபெற்ற திரைப்பட இருவெட்டு (CD) வெளியீடு ! Media Sponsor : Kalpitiya Voice & The Puttalam Times...

புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக திரைப்படமொன்றின் இருவெட்டு (CD) வெளியீடு இன்று (04) நடைபெற்றது. NINA.ED Film Production தயாரிப்பில் உருவான ‘உயிர் மடல்’ குறுந் திரைப்படத்தின் இருவெட்டு i-Soft College-ல் வெளியிடப்பட்டது.

எஸ்.எம். முஹம்மத் நிப்ராஸின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் குறுந் திரைப்படத்தின் கலைஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், அனுசரணையாளர்கள், விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
‘உயிர் மடல்’ குறுந் திரைப்படத்தின் அறிமுகவுரையில் வைத்தியர் எஸ்.எச். அரீம்ஸ், ‘இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லும் காலமொன்றில் இத் திரைப்படத்தை உருவாக்கிய வாலிபர்கள் சரியான பாதையைத் தெரிவுசெய்து செல்கின்றார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
‘உயிர் மடல்’ குறுந் திரைப்படம் உத்தியேகபூர்வமாக திரையிடப்பட்டது. அதனை உருவாக்கியவர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அனுசரணையாளர்களுக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஆசிரியர் எம்.எப்.எம். துபைல், ‘இளைஞர்களின் மனதில் பாதிப்பு ஏற்படும் விதமாக இத் திரைப்படம் இளைஞர்களைச் சென்றடைய வேணடும்’ எனக் கூறினார்.
‘கலாபூஷணம்’ எஸ்.எஸ்.எம். ரபீக், ‘பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு இத் திரைப்படம் காட்டப்பட வேண்டும்’ என்றார்.
WODEPT நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.எம். ரிபாஸ், ‘புகைத்தலுக்கு எதிரான எதிர்வினைகளை எல்லோரும் வெளிக்காட்ட வேண்டும். அப்போதுதான் சிகரட் தொடர்பான சமூகத்தின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ எனக் கூறினார்.
நன்றியுரையை எம்.ஐ.எம். நிக்ஷான் நிகழ்த்தினார். நிகழ்ச்சித் தொகுப்பை ஹிஷாம் ஹுஸைன் மேற்கொண்டார்.
இத் திரைப்படத்தின் சமூக ஊடக அனுசரணையாளர்களாக The Puttalam Times, Kalpitiya Voice ஆகியன செயற்படுகின்றனர். மேலும், இத் திரைப்படத்தை இன்னும் ஓரிரு தினங்களின் பின் YouTube-ல் பதிவேற்றுவதாக இயக்குனர் நிப்ராஸ் The Puttalam Times–க்குத் தெரிவித்தார்.
குறுந் திரைப்படக் குழுவினர்:
கதை – ஆர்.எம். நுஸ்ரி
வீடியோ ஒளிப்பதிவு – ஹஸ்னி அஹமத்
ஒளிப்படம் – எம்.என்.எம். பர்ஹான்
நடிகர்கள்
அப்பா - வைத்தியர் எஸ்.எச். அரீம்ஸ்
மகள் – ஷம்லா
பின்னணிக் குரல் – எஸ்.எப். ஷெரீன்
இயக்கம், எடிட்டிங் – எஸ்.எம். நிப்ராஸ்
தயாரிப்பு – எம்.ஐ.எம். நிக்ஷான்
அனுசரணையாளர்கள்:
ஊடக அனுசரணை
Kalpitiya Voice
The Puttalam Times
Harithra CD World
இதர அனுசரணையாளர்கள்
Excellent Dress Mart
PULSED
சுமையா அப்லால் பவுன்டேஷன்
விழி (சஞ்சிகை)












Thanks To: Puttalam Times And Ashmath (For Pictures )

Post a Comment

1 Comments