Subscribe Us

header ads

அனுமதி பத்திரம் விநியோகம்

2014ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பரிட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம் என் ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையில் இந்த முறை கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்த முறை பரீட்சைக்காக 2 லட்சத்து 34 ஆயிரத்து 197 பரீட்சாத்திகள் பாடசாலை விண்ணப்பதாரிகளாக தேற்றுகின்றனர்.

அதுபோல் 62 ஆயிரத்து 116 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாக தேற்றுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments