முன்னாள் அமைச்சர்களாக இருந்து புதிய அரசாங்கத்தில்
அமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள்
இருபது பேர் 20ம் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன்
பின்னர் தங்கள் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துக்கொள்ள
தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19ம் மற்றும் 20ம் திருத்தச்சட்டம்
சமர்ப்பிக்கப்படுவதனாலும், ஜனாதிபதியை வலுவடைய செய்வதாகவும் தெரிவித்தே
தாங்கள் அமைச்சு பதவி பெற்றுக்கொண்டனர் எனவும்,
அதன் பின்னர் அப்பதவியை இராஜினாமா செய்துக்கொள்ள தீர்மானித்திருந்தனர் எனவும் குறித்த 20 பேரும் தெரிவித்துள்ளனர்.
20ம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்திவிட்டு பொது தேர்தலை நடத்துமாறு இந்த உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments