அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் சரசோட்டா பகுதியில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் கடந்த சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் கண்விழித்து வீட்டின் நடுகூடத்துக்கு வந்தார்.
அப்போது, அங்குள்ள ஒரு பெரிய சோபாவில் ஒரு புதிய நபர் அந்த வீட்டில் கிடந்த கம்பளிகள் மற்றும் தலையணைகளை தன்மீது வாரிப்போட்டுக் கொண்டு, நிம்மதியாக குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பி, நீ யார்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று விசாரித்தபோது, வீட்டின் பின்கதவு திறந்திருந்ததால் உள்ளே வந்து உறங்கி விட்டேன் என பதில் அளித்தான்.
இந்த தவறுக்கு தன்னை மன்னித்துவிடும்படி அந்தப் பெண்ணை கேட்டுக்கொண்ட அந்த ஆசாமி, வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் பீரோவை திறந்து பார்த்த அந்தப் பெண், தனது பணப்பை, ஓட்டுனர் உரிமம் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவை திருட்டுப்போய் இருந்ததை கண்டு உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அவரது வீட்டின் அருகாமையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், டிமோத்தி போன்ராகர்(29) என்பவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


0 Comments