மன்னார் முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குழி பகுதிகளில் மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்கு சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை பெறவேண்டும் என்பது அவசியமற்றது என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு உடைமைகள் அனைத்தையும் கைவிட்டுச் சென்ற மக்கள், மீண்டும் இன்று தமது சொந்தக் காணிகளுக்கு வரும்போது ஏன் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை பெறவேண்டும். புதிதாக துறைமுக நகரத்திட்டம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படும்போதே இவ்வாறான அறிக்கைகள் பெறப்பட வேண்டும்.
மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறவில்லை. சட்டவிரோதமாக வெளிமாவட்டத்திலிருந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்படவும் இல்லை. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ் வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த மீள்குடியேற் றத்தை தடுக்கவும் இல்லை. இவை நியாயமானவை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வில்பத்து வனப்பகுதியில் சட்டவிரோத மீள்குடியேற்றம் நடைபெறுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், ஊடகவியலாளர்களை வில்பத்து சரணாலய பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். வில்பத்து சரணாலய எல்லைப் பகுதியில் மோதரங்க ஆற்று கரையோரம் ஊடகவியலாளர்களை சந்தித்து அவர் உரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடிய மர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்து கிறது. ஜனாதிபதி விசேட செயலணியின் பரிந்துரைக்கு அமைய காணிக் கச்சேரி ஊடாக மீளக்குடியேறவரும் மக்களுக்கு அரை ஏக்கர் காணி வழங்கப்படுவதுடன், அதில் தற்காலிக கொட்டில்கள் அமைப் பதற்காக தலா 50,000 ரூபா வீதமும் வழங்கப்படும்.
இதற்கமைய இம்மக்களின் மீள்குடியேற்றம் 2010ஆம் ஆண்டு முதல் ஆரம்பமானது. மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் பகுதியில் தமக்கு வழங்கப்பட்ட காணிகளை மக்கள் துப்புரவு செய்து தற்காலிக வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 30 வருடங்களாக தமது காணிகளில் மண்டிப் போயிருக்கும் காடுகளை துப்புரவு செய்யும்போது அதிலுள்ள பாரிய மரங்களும் வெட் டப்படுகின்றன. இவை அனைத்தும் பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நடைபெறுகின்றன.
சட்டவிரோத காடழிப்பு எதுவும் இங்கு நடைபெற வில்லை.
அத்துடன் எனக்கு இரண்டு ஏக்கரில் வாழைத்தோட்டம் இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் காணிகளை நான் வைத்திருப்பதாகவும் குற்றஞ்சுமத்தப்படுகிறது. எனக்கு வாழைத்தோட்டமும் கிடையாது, தேயிலைத் தோட்டமும் கிடையாது. இந்தப் பகுதியில் எனக்குக் காணிகள் கிடையாது. அரச காணிகள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டே இவை வழங்கப்பட்டுள்ளதே தவிர எந்தவொரு காணியும் பலாத்காரமாக அபகரிக்கப் படவில்லை.
இதேவேளை, கல்லாறு பகுதியின் அக்கரையிலும் இக்கரையிலும் அமைந் திருக்கும் காணிகளில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் தமது காணிகளில் அரசு வழங்கிய 50ஆயிரம் ரூபா பணத்தைக்கொண்டு தற்காலிக கொட்டில்களை அமைத்துவருகின்றனர். இந்தப் பகுதி தற்போது வனபாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
90ஆம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களைக் கைவிட்டுச் சென்றதன் பின்னர் 93ஆம் ஆண்டு மக்களின் குடியிருப்பு பகுதிகள் வனபாதுகாப்பு பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டது. மக்கள் வாழும் பகுதியை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனப் பாதுகாப்புப்பகுதியாக பிரகடனப்படுத்து வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் அமைச்சர் ரிசாட் கேள்வி யெழுப்பினார்.


0 Comments