Subscribe Us

header ads

“ஹிரு டி வி” யின் வில்பத்து அரசியல் ; குறிவைக்கப்படும் பௌத்த வாக்குகள்

ஏ எம் எம் முஸம்மில் , பதுளை 


“மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள்”  என்று மிகவும் துல்லியமாக திட்டமிட்டதொரு நாடகத்தை  கச்சிதமாக அரங்கேற்றி இந் நாட்டில் மீண்டும் இனவாத தீயை பரப்பிவிட்ட ஹிரு தொலைக்காட்சி சேவை, அதன் இலக்கை அடையும் வரை ஓயப்போவதில்லை என்றே தெரிகிறது.  

இந்த திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய இருவேறு வகையான அரசியல இலக்குகள் இருக்கலாம் என்று  ஊகிக்க முடிகின்றது. 

 1. முன்னால் அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் கோதாபயவுடன் நெருங்கிய தொடர்புகளை     வைத்துக்கொண்டு , அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ம ரா பக்ஷ,  மகன் நாமல்     ராஜபக்ஷவோடும் வெளிப்படையான மற்றும் அந்தரங்க கொடுக்கல் வாங்கள்களில் ஈடுபட்டு,      அரசியல் ஜாம்பவானாக இருந்த முன்னாள் அமைச்சர்  துமிந்த சில்வா ஹேரோயின்,     போதைபொருள் கடத்தல்  மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் மிகவும் பிரபலமானவர். 

இவரின் உடன் பிறந்த  சகோதரரான ரேனோ சில்வாவின் சொந்த தொலைகாட்சி சேவை தான் ஹிரு தொலைகாட்சி என்பது யாவரும் அறிந்த விடயம். இன்றைய நல்லாட்சியில் துமிந்த சில்வாவின்  ஹீரோயின் கடத்தல் விடயங்களும் , பாதாள உலக தொடர்புகளும் வெளிவர தொடங்கி இவர் சட்டத்திற்கு முன் கொண்டுவரப் பட்டு மிக அண்மையில் கைது செய்யப் படவுள்ளார். 

* இவரின் கைதை தடுத்து இவர் சட்டத்திலிருந்து  பாதுகாக்கப் பட வேண்டும் என்றால்     மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்     என்றால் நல்லாட்சியில் மக்களுக்கு இருக்கும் நல்லெண்ணத்தை தகர்த்தெறிந்து அதனுடன்     சேர்த்து இனவாத சிந்தனையை மீண்டும் தூண்டி விட்டு  பௌத்தர்களை ஓரணியில் திரட்ட     வேண்டும். இதன் மூலமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் எதிர்பார்த்த நடுநிலை     பௌத்தர்களின் 1௦% மேலதிக வாக்குகளையும் மஹிந்த அணிக்கு பெற்று கொடுப்பதால் தான்     இந்த இலக்கை அடையலாம் . என்ற வியூகத்தில் மேற்படி வில்பத்து நாடகத்தை அரங்கேற்றி     இருப்பார்கள்.

2. அல்லது ஹிரு தொலைகாட்சியின் உரிமையாளர் ரேனோ சில்வா எதிர் வரும் பாராளுமன்ற   தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினூடாக போட்டியிடவுள்ளார் என்ற செய்தி  ஏற்கனவே     ஊடகங்களில் கசிந்துள்ளது . இவர் ரணில் விக்கிரம சின்ஹ வோடும் இது பற்றி     பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. 

( இதன் மூலமாகவும் இவர் தன் தம்பியான துமிந்த சில்வாவை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பற்றலாம்) ஆக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் ஆதரவோடு  வன்னியில் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த ஒருவரை அரசியல் ரீதியாக பலமடையச் செய்து ரிஷாத் பதியுத்தீனை அரசியல் ரீதியாக வலுவிழக்கச்செய்யும் நோக்கிலும் இந்த வில்பத்து நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம். 

பாராளுமன்ற தேர்தலொன்றை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில் திடீரென இவ்வாறானதொரு திட்டமிட்ட புரளியை ஏற்படுத்தியதன் நோக்கம் நமது சமூகத் தலைமைகளால் ஆழ்ந்து சிந்திக்கப் பட வேண்டியதாகும்.  2௦15/௦5/16 ந் திகதி மன்னார்  மரிச்சுகடியில் இவ்விடயமாக நடத்தப் பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வட மாகாண சபையின் பெரும்பனமை இன உறுப்பினர் தெரிவித்த கருத்துக்களை எள்ளளவும் மக்களுக்கு காட்டாது மறைத்து விட்டு வானூர்தியில் சென்று பதிவு செய்யப் பட்ட வீடியோ காட்சிகளில் குறிப்பிட்ட பிரதேசத்தை படம் பிடித்து காட்டுகின்றார்கள். 

வான் வழியில் சென்று பார்த்தாலும் தரைமார்க்கமாக சென்று பார்த்தாலும் ஒரே பூமி பிரதேசம் தான் குறிப்பிட்ட விடயத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் வானூர்தியி சென்று பார்க்கும் போது காடழிப்பு நடந்துள்ளது என்ற உளவியல் ரேதியிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நோக்கிலேயே குறிப்பிட்ட வீடியோக்களை ஒளிபரப்பினார்கள். மேலும் சுமார் 1௦௦ அடி மேலே சென்று வீடியோ பதிவு செய்தால் பூமி பகுதி முழுவதும் காடாகத்தான் தெரியும். 

ஆனால் மக்களை உளவியல் ரீதியாகவே இங்கே காடழிப்பு நடைபெற்றுள்ளது. அது ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் அரசியல் பலத்தை கொண்டு செயற்படுத்தப் படுகின்றது என்ற மனப் பதிவை சிங்கள மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்த இந்த ஹிரு தொலைக்காட்சி முயற்சி செய்து வருகின்றது. ஆகவே இவர்களின் அரசியல் வியூகம் மேற்சொன்ன விடயங்களை மைய்யமாக வைத்து செயற்படுத்தப் படுவதாகவே எண்ணத் தொன்றுகின்றது. மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.       

Post a Comment

0 Comments